சேலம் காங்கிரஸ் வேட்பாளர் கே.வி.தங்கபாலு

2 முறை எம்பி., ஒரு முறை மத்திய இணையமைச்சர் என பதவி வகித்துள்ள, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சேலத்தில் மீண்டும் போட்டியிடுகிறார். இவருக்கு அறிமுகம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

தங்கபாலுவின் தந்தை பெயர் தங்கவேலு. தாயார் முத்தம்மாள். சேலம் மாவட்டம் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். 1950ம் ஆண்டு பிறந்தார். ராஞ்சி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார்.

நாயக்கர் வகுப்பைச் சேர்ந்த இவரது குடும்பம் விவசாயக் குடும்பம். 1991-ல் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 92 முதல் 96-ம் ஆண்டு வரை மத்திய நலத்துறை இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

1969ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். 1969-ல் விவசாயிகள் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு, ஒரு மாதம் சிறையில் இருந்தார். அப்போது வட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். படிப்படியாக உயர்ந்து, 1981ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், 1984ம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராகவும், 1990ம் ஆண்டு தமிழக காங்கிரஸ் துணைத் தலைவராகவும், 1997 முதல் 98 வரை தமிழக காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தார். கடந்த ஆண்டு மீண்டும் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார்.

பல்வேறு கல்வி நிறுவனங்களையும் (சென்னையில் இவருக்கு சொந்தமாக பல கல்லூரிகள் உள்ளன) நடத்தி வரும் தங்கபாலு தற்போது சேலம் தொகுதியில் பலம் வாய்ந்த அதிமுகவின் செம்மலையை எதிர்த்து நிற்கிறார்.

தங்கபாலுவுக்கு சீட் கிடைக்க விடாமல் ஒரு கோஷ்டி கடுமையாக முயன்றது. அதையும் மீறி சீட் பெற்றுள்ளார் தங்கபாலு.

ஆளும் தி.மு.க அரசின் மீது இருக்கும் கோபம் (சேலத்தில் எங்கள் பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக தினமும் இரண்டு மணி நேரம் மின்வெட்டு அமுலில் உள்ளது), தொகுதிக்கு ஒன்றும் செய்யாத தங்கபாலு மீது உள்ள கோபம் இவை எல்லாம் தங்கபாலுவிற்கு எதிராகவே உள்ளது.

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

தமிழ்மணத்தில் ஒட்டு அளிக்க இங்கு க்ளிக்கவும்

Advertisements

8 responses to “சேலம் காங்கிரஸ் வேட்பாளர் கே.வி.தங்கபாலு

 1. ///தொகுதிக்கு ஒன்றும் செய்யாத தங்கபாலு மீது உள்ள கோபம் இவை எல்லாம் தங்கபாலுவிற்கு எதிராகவே உள்ளது.///

  அதுமட்டும் இல்லை மோகன், ஈழ – இலங்கை பிரச்சனையில் இவரது பேச்சுக்கள் போதும் .. டெப்பாஸிட் காலியாவதற்க்கு..

 2. karmaveerar kamaraasar irundha congress katchila indha kalisadaigalum irukae

  parliamentla oru kelvi kooda kekadha indha aalu

  yeppadi thogudhi pirachanaya makkal kitta kepaaru

 3. நாய்க்கு கட்டற cash கெடைக்குமா?

 4. // உருப்புடாதது_அணிமா

  ஓட்டு பொட்டி அரசியல்…//

  வாங்க அணிமா அண்ணே, நைஜீரியால எப்போ தேர்தல்?

 5. // உருப்புடாதது_அணிமா

  ///தொகுதிக்கு ஒன்றும் செய்யாத தங்கபாலு மீது உள்ள கோபம் இவை எல்லாம் தங்கபாலுவிற்கு எதிராகவே உள்ளது.///

  அதுமட்டும் இல்லை மோகன், ஈழ – இலங்கை பிரச்சனையில் இவரது பேச்சுக்கள் போதும் .. டெப்பாஸிட் காலியாவதற்க்கு..//

  ஆமா, இவரு மேல கடுப்பு ஆவறதுக்கு நிறைய காரணங்கள் இவராகவே உருவாக்கிகிட்டாரு

 6. // anandhan

  karmaveerar kamaraasar irundha congress katchila indha kalisadaigalum irukae

  parliamentla oru kelvi kooda kekadha indha aalu

  yeppadi thogudhi pirachanaya makkal kitta kepaaru//

  வாங்க ஆனந்தன், தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. காமராஜர் மாதிரி ஆட்களயெல்லாம் இக்காலத்தில் எதிர்பார்க்க முடியாது போலன்றி

 7. // டுப்பு

  நாய்க்கு கட்டற cash கெடைக்குமா?//

  வாங்க டுப்பு, என்ன கேக்கறீங்கன்னு புரியலையே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s