Tag Archives: தேர்தல்

சேலம் தொகுதி வேட்பாளர்கள் விவரம்


அ.தி.மு.க. பா.ம.க. கூட்டணி – ஓமலூர் செம்மலை
தே.மு.தி.க. – கடவுள் கூட்டணி – அழகாபுரம் மோகன்ராஜ்

இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) மாநில துணை செயலாளர் – ஜாகீர் அம்மாபாளையம் சாஸ்திரிநகர் என். கிருஷ்ணன்

சுயேச்சை வேட்பாளர்கள்:

 • சேலத்தாம்பட்டி தா. பெரியசாமி (வெள்ளி வியாபாரி)
 • தளவாய்பட்டி மகேஸ்வரன் (தனியார் வங்கி)
 • அம்மாப்பேட்டை ஷாஜகான் (வக்கீல்)
 • மேச்சேரி சின்னண்ணன் (விவசாயி)
 • மேட்டூர் பி.நல்லதம்பி (விவசாயி)

கொங்கு நாடு முன்னேற்ற பேரவை – சூரமங்கலம் அசோக்சாம்ராஜ்

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை – ஓமலூர் செல்லதுரை

பகுஜன் சமாஜ் கட்சி –  குகை பால சுப்பிரமணியன்

இன்று காங்கிரஸ் வேட்பாளர் தங்கபாலு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள்

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்


தமிழ்மணத்தில் ஒட்டு அளிக்க இங்கு க்ளிக்கவும்


Advertisements

தேர்தல் கலாட்டாக்கள்


அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பாக அரக்கோணம் தொகுதியில் நிற்கும் டாக்டர். வி.ஐசக் கொடுத்திருக்கும் தேர்தல் அறிக்கை:

மாதாமாதம் மக்களுக்கு பிரியாணி(வரவர என்ன தேர்தல் அறிக்கைல சொல்லுறாங்க பாருங்க), குடிசைவாழ் மக்களுக்கு மூன்று அறைகள் மற்றும் போர்டிகோவுடன் மாடிவீடு (அட்ரா சக்கை, இதுக்கு மேல இவங்களைப்பத்தி சொல்ல முடியலை)

அரசியல் கட்சிகள் தங்களுடன் கூட்டணி சேருவதற்கு கோடிக்கணக்கில் பேரம் பேசியதாக மேடைகளில் முழங்கி வரும் விஜயகாந்த் சிக்கலில் மாட்டியுள்ளார். அவர் சொல்லியிருப்பது உண்மையென்றால் அப்படி பேரம் பேசியிருப்பவர்க ள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை காட்டிக்கொடுக்க விஜயகாந்த் மறுத்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்கிறது “சமுதாய மாற்றம் விரும்பும் இந்திய மக்கள் சங்கம்”.

விடுதலை சிறுத்தைகள் சார்பாக விழுப்புரம் வேட்பாளர் வேலாயுதம் மீது 171 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவாகியிருக்கிறது. எஸ்.பி.வேலாயுதத்திற்குப் பதிலாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சாமிதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

என்னை கூட்டணியில் சேர்க்க பல கட்சிகளும் பயப்படுகின்றன. வரும் 17ம் தேதிக்கு பின்பு நான் பேசப்போகும் உண்மைகளால் அரசியல் கட்சிகள் கதிகலங்கப் போகின்றன என்றார். நான் ஒரு கட்சியின் தலைவர். என்னையே தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அதிமுக கூறியது. அதனால்தான் நான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்று கூறியுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்.

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: பாஜக, சரத்குமார், கார்த்திக் கூட்டணி

கேள்வி பகுதி:
வைகோவை ஏன் அலைய வைத்தார் ஜெயலலிதா? பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி உருவாகும் முன்பிருந்தே அ.தி.மு.க கூட்டணியில் இருந்த ம.தி.மு.க.வை ஏன் ஜெயலலிதா இவ்வளவு அலைக்கழித்தார்? ம.தி.மு.க.வை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தி.மு.க.வுடன் வை.கோ கூட்டணி அமைக்கமாட்டாரென்று நினைத்ததாலா? அல்லது பா.ஜ.கவுடன் ம.தி.மு.க கூட்டணி சேர்ந்தாலும் அக்கூட்டணி எதிரணியின் ஓட்டைத்தான் பிரிக்கும் என்று நினைத்தாரா? அல்லது அக்கட்சியில் யாருமே இல்லையென்று நினைத்ததாலா? அல்லது வேறு காரணங்களோ யாருக்குத் தெரியும்? ஆனால் வை.கோ ரொம்ப பாவம் என்று மட்டும் தெரிகிறது. இவருக்கு இதனால் அனுதாப ஓட்டுக்கள் விழுந்தாலும் ஆச்சரியமில்லை.

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

சேலம் அ.தி.மு.க வேட்பாளர் செம்மலை


முன்னாள் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை இம்முறை சேலம் அ.தி.மு.க பாராளுமன்ற வேட்பாளர். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரான செம்மலை 1945ம் ஆண்டு பிறந்தவர். சேலம் எம். ஓலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கேட்டும் எம்.ஜி.ஆர் சீட் கொடுக்காதப்போது சுயேட்சையாக நின்று வென்றவர். வழக்கறிஞரான இவர் 1980, 85, 2001 ஆகிய ஆண்டுகளில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டவர். வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் செல்வகணபதிக்கு ஈடு கொடுக்க இவராலேயே முடியும் என்று மேலிடம் நினைத்ததால் இவருக்கு வாய்ப்பு.

சேலத்தில் சில நாட்களுக்கு முன் கூட்டத்தில் பேசிய செம்மலை, ஜெயலலிதா பிரதமராவார். அவர் போடும் முதல் கையெழுத்து தி.மு.க ஆட்சியை கலைப்பதற்காகத் தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

சில தகவல்கள்:

அன்னாள் முதல்வர் ஜெயலலிதா கல்வித்துறை அமைச்சர் செம்மலையை 2004 ஜூன் மாதம் பதவி நீக்கம் செய்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்குப் பின் இந்த அமைச்சரவை மாற்றம் நடந்தது. சொல்லப்பட்ட காரணங்கள்; தேர்தல் பிரச்சாரத்தின்போது பொது மக்களின் அதிருப்தி காரணமாக தொகுதிக்குள் நுழைய முடியாத நிலையில் இருந்த அமைச்சர்களில் டாப் லிஸ்டில் இருந்தவர்களில் செம்மலையும் ஒருவர். கல்வியமைச்சரான பின்னர், புதிய கல்லூரிகளுக்கு அனுமதி தருவது போன்ற விஷயங்களில் இவர் அதிகமாகவே ‘கை நீட்டியதாக’ வந்த புகார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் செம்மலையின் மருமகள் வாணிப்ரிதா வரதட்சிணைக் கேட்டு கணவர் எழிலமுதன், மாமியார் புஷ்பா, மாமனார் செம்மலை ஆகியோர் கொடுமைப்படுத்துகின்றனர் என்று மேட்டூர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த கேஸ் இன்னும் நிலுவையில் உள்ளது.

காங்கிரஸ் சார்பில் தங்கபாலு சேலத்தில் நிறுத்தப்பட்டால் வெற்றிக்கனி செம்மலை பக்கம் தான் என்கின்ற பேச்சு தொகுதியில் அடிபடுகிறது.

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

தே.மு.தி.க வேட்பாளர் சேலம் அழகாபுரம் மோகன்ராஜ்


சேலம் பாராளுமன்ற வேட்பாளர்கள் அறிமுகம் 1: அழகாபுரம் மோகன்ராஜ்

சேலம் பாராளுமன்றத்தொகுதியில் தே.மு.தி.க சார்பாக நிற்பவர் அழகாபுரம் மோகன்ராஜ். இவரைப்பற்றி;

mr

மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் தீவிர சிஷ்யர்களில் ஒருவரான மோகன் ராஜ், சேலம் தே.மு.தி.க வேட்பாளராக களம் நிற்கிறார். தீவிர காங்கிரஸ்காரர் மோகன்ராஜ். வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸை விட்டு வெளியேறிய போது அவருடன் இணைந்து மோகன்ராஜும் வெளியேறினார். பின்னர் வாழப்பாடியார் ராஜீவ் காங்கிரஸைக் கலைத்து விட்டு திவாரி காங்கிரஸில் இணைந்தபோது மோகன்ராஜும் உடன் சென்றார். பின்னர் காங்கிரஸை விட்டு வெளியேறினார். விஜயகாந்த் தேமுதிகவைத் தொடங்கியபோது மோகன்ராஜும் அதில் இணைந்தார்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து அழகாபுரம் மோகன்ராஜ் நிருபர்களிடம் கூறும்போது, “எங்கள் கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே கூறியபடி நாங்கள் மக்களுடனும், தெய்வத்துடனும்தான் இந்த தேர்தலில் கூட்டணி வைத்துள்ளோம். சேலம் எம்.பி. தொகுதியில் போட்டியிட, விஜயகாந்த் எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். மக்களின் ஆதரவுடனும், எங்கள் கட்சியின் அனைத்து தோழர்களின் ஒத்துழைப்புடனும், சேலம் தொகுதியில் வெற்றிபெற்று, வெற்றிக்கனியை விஜயகாந்த் காலடியில் சமர்ப்பிப்பேன்.

55 வயதாகும் மோகன்ராஜ் 1986-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை அழகாபுரம் பஞ்சாயத்து தலைவராக பணியாற்றி உள்ளார். இவர் 17 வயதில் மாணவப் பருவத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மோகன்ராஜின் குடும்பம் நீண்ட நெடிய அரசியல் பின்னணியைக் கொண்டது. 96-ம் ஆண்டு திவாரி காங்கிரஸ் சார்பில், சட்டமன்ற சேலம் 2-வது தொகுதியில் போட்டியிட்டார். மோகன்ராஜ் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு வரை படித்துள்ளார். இவரது சகோதரர் சுரேஷ்குமார்(அ.தி.மு.க.வை சேர்ந்தவர்) சேலம் மாநகராட்சி முன்னாள் மேயர் ஆவார்.

குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு சேலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பிரசாரம் தொடங்கினார்

இவருடைய தேர்தல் வாக்குறுதிகள்

 • சேலம் மாநகரில் மக்களை அவஸ்தைக்குள்ளாக்கும் கொசுத் தொல்லை உள்ளிட்டவற்றை ஒழிக்க பாடுபடுவேன்
 • தேர்தலில் வெற்றி பெற்றால் விவசாயிகளின் குறைகளை போக்க பாடுபடுவேன்
 • மத்திய அரசின் உதவியோடு இரும்பாலை விரிவாக்க திட்டம்
 • சேலம் விமான நிலையத்தை முழு அளவில் இயங்கச் செய்யும் திட்டம்
 • ஏழை மக்களுக்கு மத்திய அரசின் தொகுப்பு வீடுகள் திட்டம் மூலம் வீடு கட்டித்தர நடவடிக்கை
 • மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்க  நடவடிக்கை

இச்செய்திகள் பலத்தளங்களிருந்து திரட்டப்பட்டவை. ஏதேனும் தவறு/காப்புரிமை பிரச்சினை இருந்தால் தயவுசெய்துத் தெரிவிக்கவும்

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

நன்றி thatstamil.oneindia.in

சேலம் தொகுதி


சேலம் தொகுதிப் பற்றிய இத்தகவல்கள் பலத்தளங்களிருந்து திரட்டப்பட்டுள்ளது. சேலம் எனது சொந்த ஊர் என்பதால் இப்பதிவு.

தொகுதி எல்லை மறுசீரமைப்பு நடவடிக்கையில் திருச்செங்கோடு தொகுதியில் இடம் பெற்றிருந்த எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி சேலம் மக்களவைத் தொகுதியின் கீழ் வந்துள்ளது. ஏற்காடு(தனி) தொகுதி நீக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி தொகுதியுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

1952 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இத்தொகுதி பெரும்பாலும் காங்கிரஸின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. எஸ்.வி. ராமசாமி, கே. ராஜாராம், ரங்கராஜன் குமாரமங்கலம், வாழப்பாடி ராமமூர்த்தி (சுயேட்சையாக), கே.வி. தங்கபாலு, செல்வகணபதி போன்ற பிரபலங்கள் சேலம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இதில் எஸ்.வி.ராமசாமி மற்றும் ரங்கராஜன் குமாரமங்கலம் 3 முறை எம்.பியாகியுள்ளனர்.

கடந்த 1952, 1957, 1962, 1984, 1989, 1991 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 1967, 1971, 1980 தேர்தல்களில் திமுகவும், 1977, 1999 தேர்தல்களில் அஇஅதிமுகவும் வெற்றி பெற்றன.

காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி, 1998ஆம் ஆண்டு சுயேட்சையாக வெற்றி பெற்றார். 1996ஆம் ஆண்டில் த.மா.கா. இத்தொகுதியைக் கைப்பற்றியது.

கடந்த தேர்தலில் கே.வி. தங்கபாலு (காங்கிரஸ்) 4 லட்சத்து 44 ஆயிரத்து 591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய ராஜசேகரன் (அஇஅதிமுக) 2 லட்சத்து 68 ஆயிரத்து 964 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இத்தொகுதியில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்: ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி.

ஓமலூர் – தமிழரசு (பாமக)
எடப்பாடி – காவேரி (பாமக)
சேலம் 1 – ரவிச்சந்திரன் (அதிமுக)
சேலம் 2 – எஸ்.ஆறுமுகம் (திமுக)
வீரபாண்டி – ராஜேந்திரன் (திமுக)

கடந்த தேர்தல் நிலவரம்

தங்கபாலு (காங்கிரஸ்) – 4,44,591.
ராஜசேகரன் (அதிமுக) – 2,68,964.
வெற்றி வித்தியாசம் – 1,75,627 வாக்குகள்.

இதுவரை எம்.பியாக இருந்தவர்கள்

1952-57 – எஸ்.வி.ராமசாமி – காங்கிரஸ்.
1957-62 – எஸ்.வி.ராமசாமி – காங்கிரஸ்.
1962-67 – எஸ்.வி.ராமசாமி – காங்கிரஸ்.
1967-71 – கே.ராஜாராம் – திமுக.
1971-77 – இ.ஆர்.கிருஷ்ணன் – திமுக.
1977-80 – ப.கண்ணன் – அதிமுக.
1980-84 – சி.பழனியப்பன் – திமுக.
1984-89 – ரங்கராஜன் குமாரமங்கலம் – காங்கிரஸ்.
1989-91 – ரங்கராஜன் குமாரமங்கலம் – காங்கிரஸ்.
1991-96 – ரங்கராஜன் குமாரமங்கலம் – காங்கிரஸ்.
1996-98 – ஆர்.தேவதாஸ் – தமாகா.
1998-99 – வாழப்பாடி ராமமூர்த்தி – சுயேச்சை.
1999-04 – டி.எம். செல்வகணபதி – அதிமுக.
2004 – கே.வி.தங்கபாலு – காங்கிரஸ்.

முதல் தேர்தல்

நடந்த ஆண்டு – 1952.
வென்றவர் – எஸ்.வி.ராமசாமி (காங்கிரஸ்).

நன்றி: http://tamil.webdunia.com மற்றும் தினமலர்

சேலம் தேர்தல் நிலவரம் பற்றி அதிக தகவல்களை தர முயற்சிக்கிறேன்.

தேர்தலும் மக்கள் பார்வையும்


கர்நாடகாவில் தேர்தல் நடந்துக் கொண்டிருப்பதால், என்னுடைய கடந்த கால தேர்தல் அனுபவங்களை நினைவு கூர்கிறேன்.

நான் இதுவரைக்கும் மூன்று தேர்தல்களில் ஓட்டு போட்டிருக்கிறேன். முதல் தேர்தல் கோவையில் நான் பொறியியல் படிப்பு படித்துக் கொண்டிருந்தப்போது நடந்தது. அப்போது தேர்லுக்காக விடுமுறை விட்டார்கள். நானும் சேலம் வந்து என் வாக்கை பதிவு செய்தேன்.

பிறகு நான் சென்னையில் வேலை செய்துக்கொண்டிருந்தப்போது இன்னொரு தேர்தல். அதற்கு நான் விடுப்பு எடுத்து வந்து என்னுடைய வாக்கை பதிவு செய்தேன்.

அதுப்போல பெங்களூருவில் வேலை செய்துக்கொண்டிருந்தப்போது அடுத்த தேர்தல். அதற்கும் நான் விடுப்பு எடுத்து வந்து என்னுடைய வாக்கை பதிவு செய்தேன்.

தேர்தலுக்காக விடுப்பு எடுப்பதை பார்த்து என்னுடைய நண்பன் ஆச்சரியமாக கேட்டான், “என்னடா, தேர்தலுக்கா விடுப்பு எடுத்துக் கொண்டு போகிறாய்” என்று. ஆனால் தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை என்பதை ஏன் இவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை?

நம் மக்களுக்கு தேர்தல் என்றால் அது இன்னொரு விடுமுறை நாள் அல்லது அவர்கள் சொந்த வேலையை செய்ய ஒரு நாள். ஓட்டு போடாதவர்கள் அரசியலையும் அரசியல்வாதிகளையும் குறை சொல்வதை பார்த்திருக்கிறேன். கடமையை செய்யாத இவர்களுக்கு குறை சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது?