Monthly Archives: திசெம்பர் 2009

ஓட்டு போடுவதற்கு சலுகைகள் தரலாமே?


சமீபத்தில் குஜராத் அரசு உள்ளாட்சி தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றி உள்ளது. இதைப் போன்று சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களுக்கும் வாக்கு அளிப்பதை கட்டாயமாக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. இதற்கு தேர்தல் கமிஷனர் “தேர்தலில் ஓட்டு போடுவதை கட்டாயம் ஆக்க முடியாது. 40% மக்கள் தேர்தலில் ஓட்டு போடுவது இல்லை. இதை கட்டாயம் ஆக்குவதற்கு பதில், இதை பற்றிய விழிப்புணர்வை கொண்டு வருவதே சிறந்தது” என்று சொல்லி உள்ளார்.

ஓட்டு போடுவதை கட்டாயமாக்குவதற்க்கு பதில் ஓட்டு போடுபவர்களுக்கு ஏதாவது சலுகைகள் வழங்கலாமே? இலவசம் கொடுப்பதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் தமிழகத்தில் இதற்கும் ஏதாவது சலுகைகள் கொடுக்கலாமே? ஓட்டு போடாமல் இருப்பதில் பெரும்பான்மையானோர் மத்திய தர வர்க்கத்தினர் (middle class). எனவே ஓட்டு போடுபவர்களுக்கு வரிச்சலுகைகள் தரலாம். வரியே காட்டாதவர்களுக்கு (அதாவது அவ்வளவு வருமானம் இல்லாதவர்களுக்கு) இலவசமாக ஏதேனும் தரலாம். அல்லது அரசு சேவைகளில் ஓட்டு போட்டவர்களுக்கு முன்னுரிமை/சலுகைகள் வழங்கலாம். நான் சொல்லுவது சரி என்று பட்டால் இப்பதிவுக்கு ஓட்டு போடுங்கள். ஆனால் அதற்கு எந்த சலுகையும் கிடையாது 🙂

தமிழ்மணத்தில் ஒட்டு அளிக்க இங்கு க்ளிக்கவும்

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்