மக்களவை தேர்தல் 2009 – திரை விமரிசனம்

உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும் அதிரடி ஆக்ஸன் படம் தேர்தல் 2009, டிரைலர் இதோ:

வயதானாலும் சளைக்காத கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போட்டிபோட்டு நடித்துள்ள படம் தான் இது. கூடவே ஜால்ரா அடிக்கும் வேடங்களில் வைகோ, திருமாவளவன், இராமதாஸ், மொத்த காங்கிரஸ் கட்சியினர், மற்றும் இன்னும் பலர் நடிக்கின்றனர்.

இவ்வளவு வருடங்களாக இலங்கை தமிழர்களா அப்படி ஒரு இனம் இருக்கின்றதா என்று கேட்டு வந்த ஜெயலலிதா தற்போது தனி ஈழம் அமைக்க பாடுபடுவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கிறார்.

ஆறு மாதங்கள் மேலாக இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் மெத்தனமாக இருந்து விட்டு தேர்தல் சமயம் தீடீர் என்று ஒரு அவசர உண்ணாவிரதம் (அதை காலை சாப்பாடு சாப்பிடா விரதம் என்றும் சொல்லலாம்) இருந்து நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ளும் கருணாநிதி.

இப்படி பல பர்ஃபார்மன்ஸ் கேரக்டர்களில் இருவரும் பின்னி பெடலெடுத்து நடித்துள்ளனர்.

நாளைக்கு இப்படம் வெளியாகிறது. படத்தின் ரிஸல்ட் இன்னும் நான்கு நாட்களில் தெரிந்து விடும்.

படத்தின் ரிஸல்ட்டைப் பொறுத்து படத்தில் அருமையாக நடித்தவர்களுக்கு மார்க்கெட் வேல்யூ அதிகமாகும். நடிகர்களுக்குள் கூட்டணி மாறும்.

எது எப்படியோ நீங்கள் நாளை மறக்காமல் இப்படத்தை பார்த்து விடுங்கள். இல்லையென்றால் உங்கள் சீட்டை வைத்து வேறு யாராவது இப்படத்தை பார்த்து விடுவார்கள்.

நாளைக்கு வாக்கு சாவடியில் ஓட்டுப் போடுங்கள். அப்படியே இங்கேயும் ஓட்டு போடுங்களேன்.

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

2 responses to “மக்களவை தேர்தல் 2009 – திரை விமரிசனம்

  1. வித்தியாசமான திரை விமர்சனம் ஆனால் இன்னும் கொஞ்சம் விலாவாரியாக எழுதியிருக்கலாம். எவ்வளவு நடிகர்கள்…… தத்துருபமாக நடித்து பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்….. நீங்க என்னன்னா ரெம்ப சுருக்கமா எழுதிட்டீங்க.

    //படத்தின் ரிஸல்ட்டைப் பொறுத்து படத்தில் அருமையாக நடித்தவர்களுக்கு மார்க்கெட் வேல்யூ அதிகமாகும்.
    அதுவா அதிகமாகாது அவங்க அதிகமாக்கி கொள்வார்கள்.

  2. // குந்தவை

    வித்தியாசமான திரை விமர்சனம் ஆனால் இன்னும் கொஞ்சம் விலாவாரியாக எழுதியிருக்கலாம். எவ்வளவு நடிகர்கள்…… தத்துருபமாக நடித்து பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்….. நீங்க என்னன்னா ரெம்ப சுருக்கமா எழுதிட்டீங்க.//

    வாங்க அக்கா. இன்னும் கொஞ்சம் நல்லாவே அலசி இருக்கலாம்தான்.

    //படத்தின் ரிஸல்ட்டைப் பொறுத்து படத்தில் அருமையாக நடித்தவர்களுக்கு மார்க்கெட் வேல்யூ அதிகமாகும்.
    அதுவா அதிகமாகாது அவங்க அதிகமாக்கி கொள்வார்கள்.//

    என்ன அக்கா இப்படி சொல்லிடீங்க. நெறைய சீட் வாங்கின கட்சி பின்னாடி காங்கிரஸ்/பா.ஜ.க எப்படி எல்லாம் பேரம் நடத்த போவுது!

பின்னூட்டமொன்றை இடுக