Tag Archives: அ.தி.மு.க

சேலம் தற்போதைய தேர்தல் நிலவரம்


சேலத்தில் எதிர்பார்த்தது போன்று அதிமுக முன்னிலை. சேலம் செம்மலை 23 ஆயிரம் வாக்குகள் முன்னிலை

NDTV செய்திகள் சொல்வது தே.மு.தி.க வெற்றி!

Update:

சேலம் – அதிமுக செம்மலை வெற்றி, வாக்கு வித்தியாசம்  சுமார் 46, 491

தேர்தல் கலாட்டாக்கள்


அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பாக அரக்கோணம் தொகுதியில் நிற்கும் டாக்டர். வி.ஐசக் கொடுத்திருக்கும் தேர்தல் அறிக்கை:

மாதாமாதம் மக்களுக்கு பிரியாணி(வரவர என்ன தேர்தல் அறிக்கைல சொல்லுறாங்க பாருங்க), குடிசைவாழ் மக்களுக்கு மூன்று அறைகள் மற்றும் போர்டிகோவுடன் மாடிவீடு (அட்ரா சக்கை, இதுக்கு மேல இவங்களைப்பத்தி சொல்ல முடியலை)

அரசியல் கட்சிகள் தங்களுடன் கூட்டணி சேருவதற்கு கோடிக்கணக்கில் பேரம் பேசியதாக மேடைகளில் முழங்கி வரும் விஜயகாந்த் சிக்கலில் மாட்டியுள்ளார். அவர் சொல்லியிருப்பது உண்மையென்றால் அப்படி பேரம் பேசியிருப்பவர்க ள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை காட்டிக்கொடுக்க விஜயகாந்த் மறுத்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்கிறது “சமுதாய மாற்றம் விரும்பும் இந்திய மக்கள் சங்கம்”.

விடுதலை சிறுத்தைகள் சார்பாக விழுப்புரம் வேட்பாளர் வேலாயுதம் மீது 171 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவாகியிருக்கிறது. எஸ்.பி.வேலாயுதத்திற்குப் பதிலாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சாமிதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

என்னை கூட்டணியில் சேர்க்க பல கட்சிகளும் பயப்படுகின்றன. வரும் 17ம் தேதிக்கு பின்பு நான் பேசப்போகும் உண்மைகளால் அரசியல் கட்சிகள் கதிகலங்கப் போகின்றன என்றார். நான் ஒரு கட்சியின் தலைவர். என்னையே தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அதிமுக கூறியது. அதனால்தான் நான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்று கூறியுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்.

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: பாஜக, சரத்குமார், கார்த்திக் கூட்டணி

கேள்வி பகுதி:
வைகோவை ஏன் அலைய வைத்தார் ஜெயலலிதா? பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி உருவாகும் முன்பிருந்தே அ.தி.மு.க கூட்டணியில் இருந்த ம.தி.மு.க.வை ஏன் ஜெயலலிதா இவ்வளவு அலைக்கழித்தார்? ம.தி.மு.க.வை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தி.மு.க.வுடன் வை.கோ கூட்டணி அமைக்கமாட்டாரென்று நினைத்ததாலா? அல்லது பா.ஜ.கவுடன் ம.தி.மு.க கூட்டணி சேர்ந்தாலும் அக்கூட்டணி எதிரணியின் ஓட்டைத்தான் பிரிக்கும் என்று நினைத்தாரா? அல்லது அக்கட்சியில் யாருமே இல்லையென்று நினைத்ததாலா? அல்லது வேறு காரணங்களோ யாருக்குத் தெரியும்? ஆனால் வை.கோ ரொம்ப பாவம் என்று மட்டும் தெரிகிறது. இவருக்கு இதனால் அனுதாப ஓட்டுக்கள் விழுந்தாலும் ஆச்சரியமில்லை.

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

சேலம் அ.தி.மு.க வேட்பாளர் செம்மலை


முன்னாள் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை இம்முறை சேலம் அ.தி.மு.க பாராளுமன்ற வேட்பாளர். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரான செம்மலை 1945ம் ஆண்டு பிறந்தவர். சேலம் எம். ஓலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கேட்டும் எம்.ஜி.ஆர் சீட் கொடுக்காதப்போது சுயேட்சையாக நின்று வென்றவர். வழக்கறிஞரான இவர் 1980, 85, 2001 ஆகிய ஆண்டுகளில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டவர். வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் செல்வகணபதிக்கு ஈடு கொடுக்க இவராலேயே முடியும் என்று மேலிடம் நினைத்ததால் இவருக்கு வாய்ப்பு.

சேலத்தில் சில நாட்களுக்கு முன் கூட்டத்தில் பேசிய செம்மலை, ஜெயலலிதா பிரதமராவார். அவர் போடும் முதல் கையெழுத்து தி.மு.க ஆட்சியை கலைப்பதற்காகத் தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

சில தகவல்கள்:

அன்னாள் முதல்வர் ஜெயலலிதா கல்வித்துறை அமைச்சர் செம்மலையை 2004 ஜூன் மாதம் பதவி நீக்கம் செய்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க தோல்விக்குப் பின் இந்த அமைச்சரவை மாற்றம் நடந்தது. சொல்லப்பட்ட காரணங்கள்; தேர்தல் பிரச்சாரத்தின்போது பொது மக்களின் அதிருப்தி காரணமாக தொகுதிக்குள் நுழைய முடியாத நிலையில் இருந்த அமைச்சர்களில் டாப் லிஸ்டில் இருந்தவர்களில் செம்மலையும் ஒருவர். கல்வியமைச்சரான பின்னர், புதிய கல்லூரிகளுக்கு அனுமதி தருவது போன்ற விஷயங்களில் இவர் அதிகமாகவே ‘கை நீட்டியதாக’ வந்த புகார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் செம்மலையின் மருமகள் வாணிப்ரிதா வரதட்சிணைக் கேட்டு கணவர் எழிலமுதன், மாமியார் புஷ்பா, மாமனார் செம்மலை ஆகியோர் கொடுமைப்படுத்துகின்றனர் என்று மேட்டூர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த கேஸ் இன்னும் நிலுவையில் உள்ளது.

காங்கிரஸ் சார்பில் தங்கபாலு சேலத்தில் நிறுத்தப்பட்டால் வெற்றிக்கனி செம்மலை பக்கம் தான் என்கின்ற பேச்சு தொகுதியில் அடிபடுகிறது.

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

சேலம் வேட்பாளர்கள்


சேலம் பாராளுமன்ற தேர்தலுக்கு இதுவரை  தே.மு.தி.க வைத் தவிர வேற எந்த கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்க வில்லை. தற்போதைய சேலம் வேட்பளார்கள் நிலவரம் பற்றிய ஒரு சிறு பதிவு:

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் செம்மலை, மாவட்ட செயலாளர் எம்.கே. செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.ககள் நடேசன், எஸ்.கே.செல்வம், முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமியின் கணவர் பழனிச்சாமி, வக்கீல்கள் அய்யப்பமணி, அருள்புஷ்பராஜ், விவேகானந்தன், மற்றும் ஆக்ஸ்போர்டு பாபு, லலிதா செந்தில்குமார், முன்னாள் எம்.பி. கண்ணன் மகள், தொழில் அதிபர் ஏ.இ.சுகுமார், சதீஷ்குமார் உள்பட 63 பேர் மனு கொடுத்து உள்ளனர். இவர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது 9-ந் தேதி தெரியவரும்.

  • கொங்குநாடு முன்னேற்ற பேரவை சார்பில் திரைப்பட தயாரிப்பாளர் அசோக்சாம்ராஜ் (இவர் அருண்குமார் மற்றும் மந்த்ரா நடித்த ப்ரியம் படத்தை தயாரித்தவர்) போட்டியிடுகிறார் என்று ஒரு செய்தி
  • கொங்கு இளைஞர் பேரவையும் சேலத்தில் வேட்பாளரை நிறுத்துகிறது (இவை இரண்டும் வெவ்வேறு கட்சிகள் தான்).
  • பாரதீய ஜனதா சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சகோதரி லலிதா குமாரமங்கலம் போட்டியிடுகிறார்.
  • தி.மு.க. கூட்டணியில் சேலம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் மாநில தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான தங்கபாலு மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஆர்.பாலசுப்பிரமணி சேலம் பாராளுமன்ற தொகுதியில் பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.

இந்த வேட்பாளர்களை பற்றி அதிக விவரம் திரட்ட முயற்சிக்கிறேன்

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

எதற்கு ராஜினாமா?


இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் உள்ள  ஜெயலலிதாவிற்கு உரிய பாதுகாப்பு அளிக்காத காரணத்திற்காக திமுக அரசும் முதல்வரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் 11/நவம்பர் அன்று சட்டசபையில் கேட்டுள்ளனர். சபாநயாகர் அதைப் பற்றி பேச அனுமதிக்காததால் வழக்கம் போல சபை வெளிநடப்பு செய்து விட்டார்கள்(கூடவே மதிமுகவும் என்பதை சொல்ல வேண்டுமா?).

எனக்கு உள்ள சந்தேகம் என்னவென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை இம்மாதிரி எதிர்கட்சிகள் ராஜினாமா செய்ய சொல்லி கேட்கலாமா? (மத்திய அரசால் கலைக்கப் படுவது வேறு விஷயம்).

எது எதற்குத்தான் நம் நாட்டில் ராஜினாமா செய்ய சொல்லுவார்களோத் தெரியவில்லை. இதே இவர்கள் இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோதோ அல்லது இலங்கை தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படும்போதோ தமிழக அரசு அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி அவற்றை செய்ய தவறி, அப்பொழுது ராஜினாமா செய்ய சொல்லி கேட்டால் பரவாயில்லை. ஆனால் இவர்கள் கட்சி தலைவிக்கு சரியான பாதுகாப்பு கொடுக்காத காரணத்தால் ஒரு அரசை ராஜினாமா செய்ய சொல்லி கேட்பதை என்னவென்று சொல்வது? கட்சி தலைமைக்கு இவர்கள் விசுவாசமாக நடந்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒட்டு போட்டு மக்களுக்கு எந்தக் கட்சியும் விசுவாசமாக நடந்துக் கொள்வதுப் போன்ற அறிகுறியேத்  தெரியவில்லை.

இதுவரைக்கும் ஆளும் காட்சியில் இருப்பவர்களை ராஜினாமா செய்யக் கோரிய எந்த எதிர் கட்சியினரும் தாங்கள் ஆளும்கட்சியாக இருந்தப்போது (எந்த காரணத்திற்காக மற்றவர்களை ராஜினாமா செய்ய சொல்லி கேட்கிறார்களோ அந்த காரணங்களுக்குக்கூட) அதே காரணங்களுக்காக ராஜினாமா செய்ததில்லை.

இன்று ஆளும் கட்சியாக இருக்கும் திமுக அரசு நாளை எதிர் (எதிரி ?) கட்சியானால் இதைப் போன்றே, அல்லது இதை விட உப்புச்சப்பில்லாத விஷயங்களுக்குக் கூட ஆளும் அரசை ராஜினாமா செய்ய சொல்லி கேட்பார்கள். திமுகவோ அதிமுகவோ கழகங்களிற்கிடையே எவ்வேறுபாடும் இல்லை. மத்திய அரசில் திமுகவை காங்கிரஸ் என்றும் அதிமுகவை பிஜேபி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.  நம் திராவிட கழகங்களைப் போன்றே மற்ற மாநிலங்களில் அம்மாநிலக் கட்சிகள் எப்படி  இருக்கும் என்பது என் எண்ணம்.

ஆக மொத்தத்தில் அரசியல் நடத்த வேண்டும் என்றால் லாஜிக் பார்க்க கூடாது மற்றும் செலக்டிவ் அம்னீசியா வியாதி இருக்க வேண்டும். அப்போது தான் அரசியல் கட்சி என்கின்ற கம்பெனியை திறமையாக நடத்த முடியும்.

இப்பதிவை ஆங்கிலத்தில் பார்க்க இங்கே சொடுக்கவும் (பதிவையும் ரீ-மேக் செய்ய ஆரம்பிச்சிட்டோம்ல!!!!)

எப்படி இப்படி பன்னீர் செல்வம் ஐயா?


(முன்னால் முதல்வர்) பன்னீர் செல்வம் நேற்று சட்டசபையில் அவருடைய கட்சி(அதிமுக) தலைமைக்கு மாற்றான கருத்தை இலங்கை தமிழர்கள் விஷயத்தில் பேசி உள்ளார். அதிமுக தலைமை ஈழ பிரச்சினையில் என்ன சொல்லி இருக்கிறதென்றால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரே இலங்கையில் நடைப் பெற்று வருவதாகவும் விடுதலைப் புலிகள் அப்பாவி ஈழத் தமிழர்களை மனித கேடயமாக உபயோகித்தும் வருகிறது. ஆனால் நேற்று சட்டசபையில் பேசிய பன்னீர் செல்வம் ஈழத்தில் அப்பாவி தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று வருவதாகவும் இதற்கு மாண்புமிகு முதலமைச்சர் கருணாநிதி தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே கலைஞர் தொலைக்காட்சி இன்றைய செய்திகளில் பன்னீர் செல்வம் கட்சி தலைமைக்கு எதிராக/முரணாகப் பேசி இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளதாக ஒரு பரபரப்பை கிளப்பி உள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: முதலில் கலைஞர்  தொலைக்காட்சியில் சொன்னதுப் போல பன்னீர் செல்வம்  கட்சி தலைமைக்கு முரணாகப் பேசி இருந்தால் அது அதிசயத்திலும் அதிசயமே.

இரண்டாவது விஷயம் அவர் பேச்சில் கட்சி மரபை மறுபடி மீறி உள்ளார். அவர் எப்படி கலைஞரை மாண்புமிகு முதல்வர் என்று சொல்லி இருக்கலாம்? மைனாரிடி அரசை நடத்தி வரும் கருணாநிதி என்றுத்தானே சொல்லி இருக்க வேண்டும்?

பின் குறிப்பு: பன்னீர் செல்வம் சட்டசபையில் பேசியப்போது அவர் பின் எஸ்.வி.சேகர் உட்கார்ந்து இருப்பதை காட்டினர்.

ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி


காமெடி நடிகர் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.சேகர் குமுதம் ரிப்போர்டர்க்கு அளித்துள்ள பேட்டியில் ஒரு பகுதி:

`கட்சி எதிர்பார்த்ததைச் செய்தீர்களா? செய்யத் தவறினீர்களா?’

`கட்சி என்னிடம் எதிர்பார்த்ததை நான் செய்யத் தவறியதாகக் கூறினால் பதிலுக்கு கட்சியும் நான் எதிர்பார்த்ததைச் செய்யத் தவறிவிட்டது என்றுதான் சொல்வேன். நான் அ.தி.மு.க.வில் சேரும்போது அம்மாவிடம், `என் மகள் திருமணத்தை நீங்கள் தலைமையேற்று நடத்திவைக்க வேண்டும், மகனின் படபூஜை தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும், எப்போதும் என்னை அரவணைத்துச் செல்ல வேண்டும்’ என்று மூன்று கோரிக்கைகளை வைத்தேன். அந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேறாமல் போய்விட்டதே.’

கவனியுங்கள். எப்படி இருக்கு இந்த டீலிங்? அ.தி.மு.க.வில் சேரும்போது அவர் என்ன கேட்டுள்ளார் என்று. நல்ல வேளை, மணல் கயிறு படம் போன்று நிபந்தனைகள் போடவில்லை. அப்படி நிபந்தனை போட்டு இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்பது வேறு விடயம்.

அதே பேட்டியில் அவர் சொல்லி இருப்பதை கவனியுங்கள்:

சங்கராச்சாரியார் சொன்னார் என்பதற்காகத்தான் அ.தி.மு.க.வில் சேர்ந்தேன்.

`அப்படியானால் சுயவிருப்பப்படி நீங்கள் சேர வில்லையா?’

`அப்படியில்லை. அம்மாவின் துணிச்சல், கடவுள் நம்பிக்கை, அவர் கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடை சட்டம், அவரிடமுள்ள உண்மையான மதச்சார்பின்மை ஆகியவற்றுக்காகத்தான் அ.தி.மு.க.வில்  சேர்ந்தேன். கருணாநிதியிடம் இருப்பது பெரும்பான்மையினரைத் துன்புறுத்தி சிறுபான்மையினரை  பெருமைப்படுத்தும் மதச்சார்பின்மை.’

அட ஆண்டவா. சங்கராச்சாரியார் அவரை இப்பொழுது வேறு கட்சியில் சேர சொல்ல மாட்டார் என்றும்  எஸ்.வி. சேகருக்கு வேறு காரணங்கள் கிடைக்காது என்றும் நம்புவோம்.

அப்பேட்டியிலிருந்து மேலும் சில பகுதிகள் உங்களுக்காக:

எனது தொகுதியில் எட்டு முறை அ.தி.மு.க. சார்பாக பொதுக்கூட்டங்கள் நடந்திருக்கின்றன. ஒருமுறை கூட என்னை அழைக்கவில்லை

`தொடர்ந்து கட்சியிலிருந்து உங்களைப் புறக்கணித்து வருகிறார்கள்.  ஒருவேளை கட்சியில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டால்…..?’

`நான் கவலைப்பட மாட்டேன். வருத்தப்பட மாட்டேன். இதுவரை அம்மாவுக்கு நூறு சதவிகிதம் விசுவாசமாக இருந்த காலத்தை எண்ணி பெருமைப்பட்டுக் கொள்வேன். எல்லோருக்கும் `ஒரு கதவு மூடினால் மற்றொரு கதவு திறக்கும்’ என்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஐந்து கதவுகள் (5 கட்சிகள்?) திறந்திருக்கின்றன’

பின்குறிப்பு:
தலைப்புக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தம் இருப்பதாக நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்லன்.

நன்றி: குமுதம் ரிப்போர்டர்