கன்னாப்பின்னாச் செய்திகள்


  • குருவை சாகுபடிக்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விடவில்லை – ஜெயலலிதா குற்றச்சாட்டு

அதிசயம் ஆனால் உண்மை – மைனாரிட்டி தி.மு.க அரசு இதற்கு பொறுப்பு இல்லையா?

  • உலகத் தமிழ் செம்மொழி மாநாடு – தமிழகமெங்கும் மூன்று நாட்கள் விடுமுறை

எடியூரப்பாவிடம் பேசி கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களுக்கும் விடுமுறை வாங்கி கொடுக்கலாமே, ஹிஹி!

  • பெண் சிங்கம் – இதை ஏன் உதயநிதி ஸ்டாலின் (ரெட் ஜயன்ட்) அல்லது தயாநிதி அழகிரி (கிளௌட் 9 ) விநியோகிக்க வில்லை?
  • உலகத் தமிழ் செம்மொழி மாநாடு விளம்பரம் சன் டிவியில் வரும் போது, எழுத்து பிழையோடு போடுகின்றனரே? (உலகத் தமிழ செம்மொழி மாநாடு என்று) – மாநாடு முடியும் முன்னர் இதை சரி செய்வார்களா?
  • தமிழ் வழி பொறியியல் பட்டப்படிப்பு அறிமுகம் – இதில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி இருக்கும், இவர்கள் வேலை தேடி தமிழ்நாடை விட்டு வெளியே போக முடியுமா?

ஓட்டு போடுவதற்கு சலுகைகள் தரலாமே?


சமீபத்தில் குஜராத் அரசு உள்ளாட்சி தேர்தல்களில் வாக்களிப்பதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றி உள்ளது. இதைப் போன்று சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களுக்கும் வாக்கு அளிப்பதை கட்டாயமாக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. இதற்கு தேர்தல் கமிஷனர் “தேர்தலில் ஓட்டு போடுவதை கட்டாயம் ஆக்க முடியாது. 40% மக்கள் தேர்தலில் ஓட்டு போடுவது இல்லை. இதை கட்டாயம் ஆக்குவதற்கு பதில், இதை பற்றிய விழிப்புணர்வை கொண்டு வருவதே சிறந்தது” என்று சொல்லி உள்ளார்.

ஓட்டு போடுவதை கட்டாயமாக்குவதற்க்கு பதில் ஓட்டு போடுபவர்களுக்கு ஏதாவது சலுகைகள் வழங்கலாமே? இலவசம் கொடுப்பதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் தமிழகத்தில் இதற்கும் ஏதாவது சலுகைகள் கொடுக்கலாமே? ஓட்டு போடாமல் இருப்பதில் பெரும்பான்மையானோர் மத்திய தர வர்க்கத்தினர் (middle class). எனவே ஓட்டு போடுபவர்களுக்கு வரிச்சலுகைகள் தரலாம். வரியே காட்டாதவர்களுக்கு (அதாவது அவ்வளவு வருமானம் இல்லாதவர்களுக்கு) இலவசமாக ஏதேனும் தரலாம். அல்லது அரசு சேவைகளில் ஓட்டு போட்டவர்களுக்கு முன்னுரிமை/சலுகைகள் வழங்கலாம். நான் சொல்லுவது சரி என்று பட்டால் இப்பதிவுக்கு ஓட்டு போடுங்கள். ஆனால் அதற்கு எந்த சலுகையும் கிடையாது 🙂

தமிழ்மணத்தில் ஒட்டு அளிக்க இங்கு க்ளிக்கவும்

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

சன்னின் பெருந்தன்மை


நேற்று சன் தொலைக்காட்சி டாப் டென் மூவிஸ் பார்க்க நேர்ந்தது. அதில் டாப் டென்னில் வழக்கம் போல சன் பிக்சர்ஸ் படமான ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் தான் முதலிடம் இருக்கும் என்று எண்ணிய எனக்கு சன் அதிர்ச்சி கொடுத்தது. கந்தசாமி படம் முதலில் இருந்தது. எப்படி இது சாத்தியம்? சன் பிக்சர்ஸ் தவிர வேறு பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்கள் கூட வசூலை அள்ளுமா? சன் பிக்சர்ஸின் பெருந்தன்மை வேறு எந்த பிக்சர்ுக்காவது வருமா?

பெருத்த அவமானம் – குமுறுகிறார் நடிகர் விவேக்


முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை விமான நிலையத்தில் சோதனை போட்டு அவமானப்படுத்திய அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளை பற்றித் தான் கூறுகிறார் விவேக். தனது பிசியான ஷெட்யூலுக்கு நடுவே கலாமை நேரில் சந்தித்து இது குறித்து பேசிவிட்டு வந்தாராம். இவ்வளவுக்கு பிறகும், இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் வழக்கம் போல அமைதி காக்கும் மக்கள் மீதும் விவேக்கிற்கு கடும் கோபம் இருக்கிறது.

எனக்கு ஒரு சந்தேகம். சாமி படத்தில் பாரதியார் புகைப்படத்தை சிறுவர்களிடம் காட்டி இவர் யாரென்று கேட்பார், அதற்கு அவர்களில் ஒருவன் “சந்தன கடத்தல் வீரப்பன்” என்று சொல்வான். இவர் இதை நகைச்சுவைக்காக செய்தாராம். பாரதியாரை இவர் அசிங்கப்படுத்த வில்லையா? என்னங்கையா நியாயம் இது? ஒரு வேளை நம்ம ஊர் காரங்களை நாம மட்டும் தான் அசிங்கப் படுத்தனும்னு நெனச்சி அந்த மாதிரி பண்ணிட்டாரு போல!

தமிழிஷில் ஓட்டு போட இங்கு க்ளிக்கவும்

சேலம் தற்போதைய தேர்தல் நிலவரம்


சேலத்தில் எதிர்பார்த்தது போன்று அதிமுக முன்னிலை. சேலம் செம்மலை 23 ஆயிரம் வாக்குகள் முன்னிலை

NDTV செய்திகள் சொல்வது தே.மு.தி.க வெற்றி!

Update:

சேலம் – அதிமுக செம்மலை வெற்றி, வாக்கு வித்தியாசம்  சுமார் 46, 491

மக்களவை தேர்தல் 2009 – திரை விமரிசனம்


உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும் அதிரடி ஆக்ஸன் படம் தேர்தல் 2009, டிரைலர் இதோ:

வயதானாலும் சளைக்காத கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போட்டிபோட்டு நடித்துள்ள படம் தான் இது. கூடவே ஜால்ரா அடிக்கும் வேடங்களில் வைகோ, திருமாவளவன், இராமதாஸ், மொத்த காங்கிரஸ் கட்சியினர், மற்றும் இன்னும் பலர் நடிக்கின்றனர்.

இவ்வளவு வருடங்களாக இலங்கை தமிழர்களா அப்படி ஒரு இனம் இருக்கின்றதா என்று கேட்டு வந்த ஜெயலலிதா தற்போது தனி ஈழம் அமைக்க பாடுபடுவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கிறார்.

ஆறு மாதங்கள் மேலாக இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் மெத்தனமாக இருந்து விட்டு தேர்தல் சமயம் தீடீர் என்று ஒரு அவசர உண்ணாவிரதம் (அதை காலை சாப்பாடு சாப்பிடா விரதம் என்றும் சொல்லலாம்) இருந்து நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ளும் கருணாநிதி.

இப்படி பல பர்ஃபார்மன்ஸ் கேரக்டர்களில் இருவரும் பின்னி பெடலெடுத்து நடித்துள்ளனர்.

நாளைக்கு இப்படம் வெளியாகிறது. படத்தின் ரிஸல்ட் இன்னும் நான்கு நாட்களில் தெரிந்து விடும்.

படத்தின் ரிஸல்ட்டைப் பொறுத்து படத்தில் அருமையாக நடித்தவர்களுக்கு மார்க்கெட் வேல்யூ அதிகமாகும். நடிகர்களுக்குள் கூட்டணி மாறும்.

எது எப்படியோ நீங்கள் நாளை மறக்காமல் இப்படத்தை பார்த்து விடுங்கள். இல்லையென்றால் உங்கள் சீட்டை வைத்து வேறு யாராவது இப்படத்தை பார்த்து விடுவார்கள்.

நாளைக்கு வாக்கு சாவடியில் ஓட்டுப் போடுங்கள். அப்படியே இங்கேயும் ஓட்டு போடுங்களேன்.

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

சேலம் தொகுதி வேட்பாளர்கள் விவரம்


அ.தி.மு.க. பா.ம.க. கூட்டணி – ஓமலூர் செம்மலை
தே.மு.தி.க. – கடவுள் கூட்டணி – அழகாபுரம் மோகன்ராஜ்

இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) மாநில துணை செயலாளர் – ஜாகீர் அம்மாபாளையம் சாஸ்திரிநகர் என். கிருஷ்ணன்

சுயேச்சை வேட்பாளர்கள்:

  • சேலத்தாம்பட்டி தா. பெரியசாமி (வெள்ளி வியாபாரி)
  • தளவாய்பட்டி மகேஸ்வரன் (தனியார் வங்கி)
  • அம்மாப்பேட்டை ஷாஜகான் (வக்கீல்)
  • மேச்சேரி சின்னண்ணன் (விவசாயி)
  • மேட்டூர் பி.நல்லதம்பி (விவசாயி)

கொங்கு நாடு முன்னேற்ற பேரவை – சூரமங்கலம் அசோக்சாம்ராஜ்

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை – ஓமலூர் செல்லதுரை

பகுஜன் சமாஜ் கட்சி –  குகை பால சுப்பிரமணியன்

இன்று காங்கிரஸ் வேட்பாளர் தங்கபாலு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள்

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்


தமிழ்மணத்தில் ஒட்டு அளிக்க இங்கு க்ளிக்கவும்


சேலம் செய்திகள்


சேலத்தில் உள்ள தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தர்மபுரி, சேலம், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

25ம் தேதி ஜெயலலிதா சேலம் வருகை
சேலத்தில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரும் 25ம் தேதி சேலம் வருகிறார். ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதால், ஹெலிபேடு தளங்கள் ஆய்வு செய்யப்பட்டன. சேலத்தில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், அரசு கலைக்கல்லூரி, சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. பள்ளி ஆகும். இந்த இடங்களை ஆய்வு செய்வதற்காக ஹெலிபேடு தள இன்ஜினியர் ஹரி என்பவர் சேலம் வந்தார். சிறுமலர் மேல்நிலைப்பள்ளி இடம் தகுதியற்றதாக இருந்ததால் அது நீக்கப்பட்டது(தப்பித்தது சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மைதானம் 🙂 ). தற்போது அரசு கலைக்கல்லூரி மட்டுமே ஹெலிகாப்டர் வந்து இறங்குவதற்கு தகுதியாக உள்ளது. ஏப்., 25ம் தேதி வரும் ஜெயலலிதா நான்கு நாட்கள் சேலம் எல்.ஆர்.என்., ஹோட்டலில் தங்குகிறார். சேலத்தில் இருந்து நாமக்கல், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.

சேலம் லோக்சபா தொகுதியில் போட்டி சுயேட்சை வேட்பாளர் முதல் மனு தாக்கல்

சேலம் லோக்சபா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சுயேட்சை ஒருவர் நேற்று மனு தாக்கல் செய்தார்.லோக்சபா தேர்தல் மனுத்தாக்கல் நேற்று துவங்கியது. சேலம் லோக்சபா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சுயேட்சையாக போட்டியிடும் ஷாஜகான் என்பவர் முதலாவதாக மனுத்தாக்கல் செய்தார். அவர் பற்றிய விபரம்: பெயர் – எம்.ஏ.ஷாஜகான்(38). தொழில் – வக்கீல். சேலம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை வித்யாநகரில் வசித்து வருகிறார்.கடந்த 2004 லோக்சபா தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட இவர் எட்டாயிரத்து 466 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார்(என்னது மூன்றாவது இடமா?). 2006 சட்டசபை தேர்தலில் சேலம் 1வது தொகுதியில் போட்டியிட்டு 766 வாக்குகள் பெற்றார். தற்போது மூன்றாவது முறையாக சேலம் லோக்சபா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு, தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ஐந்து ஏக்கர் நிலம் ரூ.15 லட்சம், மனைவி பெயரில் உள்ள வீடு ரூ.15 லட்சம், நகை ரூ.நான்கு லட்சம், ஒரு ஹோண்டா பைக் ஆகியவற்றை காட்டியுள்ளார். சிலிண்டர், “டிவி’ முரசு இவற்றில் ஏதாவது ஒன்றை சின்னமாக ஒதுக்க வேண்டும் என அவர் மனுவில் கூறியுள்ளார்.

தொழிலாளர் முன்னேற்ற கழக வேட்பாளர் அறிவிப்பு கூட்டம்

அகில இந்திய அனைத்து தொழிலாளர் முன்னேற்ற கழகத்தின் சேலம் லோக்சபா தொகுதி வேட்பாளர் அறிவிப்பு கூட்டம் இன்று நடக்கிறது.அகில இந்திய அனைத்து தொழிலாளர் முன்னேற்ற கழகத்தின் சேலம் மண்டல செயலாளர் கணேசன் விடுத்துள்ள அறிக்கை:
அகில இந்திய அனைத்து தொழிலாளர் முன்னேற்ற கழகத்தின் சேலம் வேட்பாளராக கவுசல்யா போட்டியிடுகிறார். வேட்பாளர் அறிவிப்பு கூட்டம் இன்று மாலை சவுடாம்பிகா ஹோட்டலில் நடக்கிறது. இதில் அனைத்து கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

சேலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தங்கபாலுவை மாற்றக்கோரி காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்தனர்.

ஓமலூர் பஸ் நிலையம் முன்பு நடந்த இந்த உண்ணாவிரதத்துக்கு வட்டார தலைவர் வெங்கடாசலம், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

இதில் காங்கிரஸ் தொண்டர்கள் 200 பேர் வரை கலந்து கொண்டனர். உண்ணாவிரதம் இருந்த மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:-

தங்கபாலு சரியில்லாத வேட்பாளர், மக்களிடையே அவருக்கு செல்வாக்கு இல்லை. ஏற்கனவே அவர் மக்களுக்காக எந்தவித உதவியும் செய்யவில்லை. நலத்திட்ட உதவிகளையும் வாங்கித்தரவில்லை. இந்தியாவை ஆண்ட கட்சியான காங்கிரசில் எம்.பி.யாக இருந்த அவர் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் ஒன்றும் செய்ய வில்லை. உதவி கேட்டு போன தொண்டர்களையும் புறக்கணித்தார். அவர் குடும்பத்தின் வளர்ச்சிக்கு மட்டுமே பாடுபட்டு உள்ளார்.

தொண்டர்களையும் அவர் அனுசரித்து போகவில்லை (இதற்கு என்ன அர்த்தம்). அவரை சேலம் தொகுதியில் இருந்து மாற்றிவிட்டு வேறு ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தா விட்டால் அவருக்கு ஓட்டு போட மாட்டோம். வேறு கட்சிக்கு ஓட்டு போடுவோம்.

சேலம் தாதகாப்பட்டி அருகில் உள்ளது குமரன் நகர். இந்த பகுதியில் சிறிய அளவிலான பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு இருந்தது. இதில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடமாட்டோம். பொதுமக்கள் ஓட்டு போட வும் கூடாது. ஈழத்தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை. இலங்கை தமிழர்களை கொல்ல ஆயுதம் வழங்கிய காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

சுயமாரியாதை உள்ள தமிழர்கள் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும். சேலத்திலும் காங்கிரசை தோற்கடிப்போம்.

இவ்வாறு அந்த போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாரத வெண்புறா இயக்கம் தேர்தலில் இருந்து விலக முடிவு

லோக்சபா தேர்தலில் பாரத வெண்புறா தமிழ்நாடு இயக்கம்(இப்படி ஒரு கட்சியா????)‌ சார்பில் 14 தொகுதிகளில் போட்டியிட முடிவு செயயப்பட்டது. கடந்த ஏப்., 5 ல் நடந்த தலைமை செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது.

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

தமிழ்மணத்தில் ஒட்டு அளிக்க இங்கு க்ளிக்கவும்

சேலம் காங்கிரஸ் வேட்பாளர் கே.வி.தங்கபாலு


2 முறை எம்பி., ஒரு முறை மத்திய இணையமைச்சர் என பதவி வகித்துள்ள, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சேலத்தில் மீண்டும் போட்டியிடுகிறார். இவருக்கு அறிமுகம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

தங்கபாலுவின் தந்தை பெயர் தங்கவேலு. தாயார் முத்தம்மாள். சேலம் மாவட்டம் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். 1950ம் ஆண்டு பிறந்தார். ராஞ்சி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார்.

நாயக்கர் வகுப்பைச் சேர்ந்த இவரது குடும்பம் விவசாயக் குடும்பம். 1991-ல் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 92 முதல் 96-ம் ஆண்டு வரை மத்திய நலத்துறை இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

1969ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். 1969-ல் விவசாயிகள் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு, ஒரு மாதம் சிறையில் இருந்தார். அப்போது வட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். படிப்படியாக உயர்ந்து, 1981ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், 1984ம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராகவும், 1990ம் ஆண்டு தமிழக காங்கிரஸ் துணைத் தலைவராகவும், 1997 முதல் 98 வரை தமிழக காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தார். கடந்த ஆண்டு மீண்டும் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார்.

பல்வேறு கல்வி நிறுவனங்களையும் (சென்னையில் இவருக்கு சொந்தமாக பல கல்லூரிகள் உள்ளன) நடத்தி வரும் தங்கபாலு தற்போது சேலம் தொகுதியில் பலம் வாய்ந்த அதிமுகவின் செம்மலையை எதிர்த்து நிற்கிறார்.

தங்கபாலுவுக்கு சீட் கிடைக்க விடாமல் ஒரு கோஷ்டி கடுமையாக முயன்றது. அதையும் மீறி சீட் பெற்றுள்ளார் தங்கபாலு.

ஆளும் தி.மு.க அரசின் மீது இருக்கும் கோபம் (சேலத்தில் எங்கள் பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக தினமும் இரண்டு மணி நேரம் மின்வெட்டு அமுலில் உள்ளது), தொகுதிக்கு ஒன்றும் செய்யாத தங்கபாலு மீது உள்ள கோபம் இவை எல்லாம் தங்கபாலுவிற்கு எதிராகவே உள்ளது.

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்

தமிழ்மணத்தில் ஒட்டு அளிக்க இங்கு க்ளிக்கவும்

தேர்தல் கலாட்டாக்கள்


அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியின் சார்பாக அரக்கோணம் தொகுதியில் நிற்கும் டாக்டர். வி.ஐசக் கொடுத்திருக்கும் தேர்தல் அறிக்கை:

மாதாமாதம் மக்களுக்கு பிரியாணி(வரவர என்ன தேர்தல் அறிக்கைல சொல்லுறாங்க பாருங்க), குடிசைவாழ் மக்களுக்கு மூன்று அறைகள் மற்றும் போர்டிகோவுடன் மாடிவீடு (அட்ரா சக்கை, இதுக்கு மேல இவங்களைப்பத்தி சொல்ல முடியலை)

அரசியல் கட்சிகள் தங்களுடன் கூட்டணி சேருவதற்கு கோடிக்கணக்கில் பேரம் பேசியதாக மேடைகளில் முழங்கி வரும் விஜயகாந்த் சிக்கலில் மாட்டியுள்ளார். அவர் சொல்லியிருப்பது உண்மையென்றால் அப்படி பேரம் பேசியிருப்பவர்க ள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை காட்டிக்கொடுக்க விஜயகாந்த் மறுத்தால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்கிறது “சமுதாய மாற்றம் விரும்பும் இந்திய மக்கள் சங்கம்”.

விடுதலை சிறுத்தைகள் சார்பாக விழுப்புரம் வேட்பாளர் வேலாயுதம் மீது 171 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவாகியிருக்கிறது. எஸ்.பி.வேலாயுதத்திற்குப் பதிலாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சாமிதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

என்னை கூட்டணியில் சேர்க்க பல கட்சிகளும் பயப்படுகின்றன. வரும் 17ம் தேதிக்கு பின்பு நான் பேசப்போகும் உண்மைகளால் அரசியல் கட்சிகள் கதிகலங்கப் போகின்றன என்றார். நான் ஒரு கட்சியின் தலைவர். என்னையே தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அதிமுக கூறியது. அதனால்தான் நான் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்று கூறியுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்.

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: பாஜக, சரத்குமார், கார்த்திக் கூட்டணி

கேள்வி பகுதி:
வைகோவை ஏன் அலைய வைத்தார் ஜெயலலிதா? பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி உருவாகும் முன்பிருந்தே அ.தி.மு.க கூட்டணியில் இருந்த ம.தி.மு.க.வை ஏன் ஜெயலலிதா இவ்வளவு அலைக்கழித்தார்? ம.தி.மு.க.வை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தி.மு.க.வுடன் வை.கோ கூட்டணி அமைக்கமாட்டாரென்று நினைத்ததாலா? அல்லது பா.ஜ.கவுடன் ம.தி.மு.க கூட்டணி சேர்ந்தாலும் அக்கூட்டணி எதிரணியின் ஓட்டைத்தான் பிரிக்கும் என்று நினைத்தாரா? அல்லது அக்கட்சியில் யாருமே இல்லையென்று நினைத்ததாலா? அல்லது வேறு காரணங்களோ யாருக்குத் தெரியும்? ஆனால் வை.கோ ரொம்ப பாவம் என்று மட்டும் தெரிகிறது. இவருக்கு இதனால் அனுதாப ஓட்டுக்கள் விழுந்தாலும் ஆச்சரியமில்லை.

தமிழிஷில் ஒட்டு போட இங்கு க்ளிக்குங்கள்